Sunday, October 10, 2021

தூங்காத இரவும் பல உண்டு

 


-------_---------_-------_-------------------------

தூங்காத இரவும் பல உண்டு

துடிக்கின்ற துன்பம் பல உண்டு

பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி தீரும் அன்று

தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி
தீரும் அன்று

இறை தந்த ஒளியாக வந்தாரே...!!
நிறைவான பெரு வாழ்வு தந்தாரே...!!

இறை தந்த  ஒளியாக வந்தாரே..
நிறைவான பெரு வாழ்வு தந்தாரே..!!

குறை காண முடியாத கோமான் நபிப்பெருமானை நான் காணும் நன்னாளும் என்று...??

குறை காண முடியாத கோமான் நபிப்பெருமானை நான் காணும் நன்னாளும் என்று...??

தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி தீரும் அன்று

மக்காவில் முத்தாக மலர்ந்தாரே
மதினாவில் மஃமூதர் மறைந்தாரே...!
மக்காவில் முத்தாக மலர்ந்தாரே
மதினாவில் மஃமூதர் மறைந்தாரே...!

இறை தந்த மறை தந்து மறைந்தாலும் மறையாத
கண்மணியைக் காணும் நாள் என்று..??
இறை தந்த மறை தந்து மறைந்தாலும் மறையாத
கண்மணியைக் காணும் நாள் என்று..??

தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி தீரும் அன்று

எளியோன் என் கனவில் நீர் வருவீரே
ஒளியான திருக்காட்சி தருவீரே

எளியோன் என் கனவில் நீர் வருவீரே
ஒளியான திருக்காட்சி தருவீரே

கனவான அருங்காட்சி நனவாகி நான் காண நாயனருள் கிடைத்திடும் நாள் என்று...???

கனவான அருங்காட்சி நனவாகி நான் காண நாயனருள் கிடைத்திடும் நாள் என்று...???

தூங்காத இரவும் பல உண்டு
துடிக்கின்ற துன்பம் பல உண்டு
பாங்கான மாநபி யைக் கண்டு
மகிழ்ந்தாலே பிணி தீரும் அன்று

Thursday, October 29, 2020

 யா செய்யதி...யா ரஸூலே..

யா செய்யதி... யா ரஸூலே..!!

 எம்மானே அருள்மிகும் கோமானே புகழ் நிறைப் பெருமானே மா நபி

யா செய்யதி...யா ரஸூலே...

யா செய்யதி....!!!!





இறையொன்று என்றீரே

மறை கொண்டு தந்தீரே



விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வேந்தர் நபி.....!



இறையொன்று என்றீரே

மறை கொண்டு தந்தீரே



விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வேந்தர் நபி.....!



பாராத சோகம் எந்தன் தேகம் வாட்டுது...

லாலால லால்லா..லால்ல ..லால்லா...லால்லலா

தீராத தாகம் கொண்டு பாடும் பாட்டிது

யா செய்யதி...யா ரஸூலே..

யா செய்யதி...யா ரஸூலே...

 எம்மானே அருள்மிகும் கோமானே புகழ் நிறைப் பெருமானே மா நபி

யா செய்யதி...யா ரஸூலே

யா செய்யதி...!!!



இம்மையிலும் எமைக் காப்பீர்

மறுமையிலும் கரை சேர்ப்பீர்



இறையோனின் இதயங்கவர் ஏந்தல் நபி......!



இம்மையிலும் எமைக் காப்பீர்

மறுமையிலும் கரை சேர்ப்பீர்



இறையோனின் இதயங்கவர் ஏந்தல் நபி......!





காணாது நாங்கள் கொண்ட காதல்  அல்லவா..!!



லாலால லால்லா..லால்ல ..லால்லா...லால்லலா



வாழ்நாளில் காணும் வரம் தாரீர் மன்னவா...!!




Saturday, November 1, 2014

முகவரி தொலைத்த முழுமைகள் ...!

செதுக்கும்போது 
சிதறித் தெறிக்கும் 
சிறு கற்களுக்குள்ளும் ஒளிந்திருக்கக்கூடும்
சிற்பியறியா
கலைநயமிக்க சிற்பங்கள்.....!


எழுதும்போது 
தெரிவு செய்யப்படாது 
நீக்கப்பட்ட வார்த்தைகளுக்குள்ளும்
ஒளிந்திருக்கக்கூடும் 
கவிஞனறியா ஆயிரமாயிரம் 
இலக்கிய நயங்கள்....!


படைப்புகளில் 
விடுபட்டுப்போன 
இக்கற்களும் சொற்களும் 
இயல்பில் 
பண்புயர் தியாகிகளே....!

..........................................................................

Wednesday, September 18, 2013

மரணம் ...!

மரணம்...இது ...
இறைவனெனும் ஆசிரியர் இயற்றிய படைப்பெனும் புத்தகத்தின் இம்மைப் பதிப்பின் இறுதி வரி....!
மறுமைப் பதிப்பின் முதல் வரி..!

Monday, September 9, 2013

யா ரஸூலல்லாஹ்...!(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)



சத்தியத்தின் உருவே...யா ரஸூலல்லாஹ்...!
சமத்துவத்தின் கருவே...யா ரஸூலல்லாஹ்...!
படைப்புகளின் குருவே...யா ரஸூலல்லாஹ்...!
பண்புயர் அதிசயத் தருவே...யா ரஸூலல்லாஹ்...!

அற்புதங்களின் ஊற்றே...யா ரஸூலல்லாஹ்...!
அருட்கொடையின் காற்றே...யா ரஸூலல்லாஹ்...!
மன்னவனின் ஒளியே..யா ரஸூலல்லாஹ்...!
மதித்தேகும் நல்வழியே...யா ரஸூலல்லாஹ்...!

முஸ்லீம்களின் இதயத் துடிப்பே...யா ரஸூலல்லாஹ்...!
மூமின்களின் நீங்காப் பிடிப்பே...யா ரஸூலல்லாஹ்...!
வியப்பான நற்பிறப்பே...யா ரஸூலல்லாஹ்...!
விழுமிய சிந்தனைத் திறப்பே...யா ரஸூலல்லாஹ்...!

தீமைகள் தீண்டா மனிதமே..யா ரஸூலல்லாஹ்...!
திருமறையாய் வாழ்ந்த புனிதமே...யா ரஸூலல்லாஹ்...!
மதீனாவாழ் நாயகமே...யா ரஸூலல்லாஹ்...!
மன்பதையின் தாயகமே...யா ரஸூலல்லாஹ்...!

Saturday, September 7, 2013

தனிமை கண(ன) அதிர்வுகள்..!

அச்சமூட்டி எச்சரித்து
அமிழ்த்திய போதும்

ஆழ்மனக்கடலை நச்செரித்து
அவ்வப்போது

உன் பெயரை உச்சரித்தே
அடங்குகின்றன
என் இதழலைகள்....!

நீ அற்ற தருணங்களின் ரணத்தில்
சுற்றம் மறந்துபோய்

சுகங்களின் கதவடைத்து
சோக ராகம் இசைத்த போதும்

வெற்று கணத்தின் வெறுமை போக்கிட
காற்று தாலாட்டிடும் ஜன்னலாய்

உன் சிந்தனை தெளித்துப் போகிற
மகிழ்வான நினைவுச் சிதறல்களில்

தார்மீகக் காரணங்களேதுமின்றி
முற்றும் நனைகிறதென் மனமாளிகை.....!

மண்ணாகவே இருந்தேன்...
உன்னைக் காணும் வரை

பார்வை விதை விதைத்தாய்
அவ்வப்போது....
புன்னகை நீருற்றி வளர்த்தாய்..

சேர்ந்தே இருப்போம் என்ற
நம்பிக்கை உரமிட்டு என்னை வலுப்படுத்தினாய்

உன் ஊட்டத்தில் வளர்ந்து
விருட்சமானது என் நேசம்....

இத்தனைக்கும் பிறகு...

எதிரியைப் போல்
பிரிவு விஷம் வைத்து
என்னைப் பட்ட மரமாக்கியதேனோ....?

Saturday, July 13, 2013

பள்ளிவாசல்...!




வாசல்..பள்ளிவாசல்..தொழும் பள்ளிவாசல்.!

ஏக வல்லோன் அவன் இல்லம் அது பள்ளிவாசல் 

வணக்கத்தின் சிறப்பிடம் பள்ளிவாசல்-இறைப்  
பிணைப்புக்கும் அதுவே தலை வாசல் ..!.

                                           (வாசல்....பள்ளிவாசல்..)


 கடமையானது ஐந்து வக்தடா... 
 மடமை கொண்டு நீ மறந்திடாதடா..!.

 நேற்று வரப்போவதில்லை... 
 நாளை  நம் கையில் இல்லை..!. 

எல்லாம் அவன் கையில் தானே ...
எதுவும் அசையாது தானே .!...

வாழ்க்கை உண்டிங்கு வல்லோன் அருளாலே... 
அவன் துணையில்லாமல் அவனியில் நாமேது ...?
வணங்கப் புறப்படு !....
                                          (வாசல்....பள்ளிவாசல்..)

வணக்கம் என்பது சுவனச் சாவியாம் 
பிணக்கம் கொண்டு நீ தொலைத்திடாதடா...! 

நம்மைத் தொழ வைக்கும் முன்பே...
நாமும் இறை தொழுதல் மாண்பே ...!

முறையாய்த் தொழுவோர்க்கு எங்கும்  
இறையின் அருளூற்று பொங்கும்...! 

வல்லான் அருள்பெற்றால் வாழ்வில் பயமேது ...?
வழிபாடு இல்லாமல் வாழ்வில் ஜெயமேது...?
வணங்கப் புறப்படு !....

வாசல்...பள்ளிவாசல்...தொழும் பள்ளிவாசல்..! 
ஏக வல்லோன் அவன் இல்லம் அது பள்ளிவாசல் 

வணக்கத்தின் சிறப்பிடம் பள்ளிவாசல்-இறைப்  
பிணைப்புக்கும் அதுவே தலை வாசல் ..!.